பசுந்தேயிலைக்கு உரிய விலை கோரும் நீலகிரி மாவட்ட விவசாயிகள்

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது நீலகிரி மாவட்டம். இம்மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பச்சைக் கம்பளம் போற்றியது போல் தேயிலை தோட்டங்கள் அனைவரின் கண்களுக்கும் விருந்தளித்து வருகிறது. இம்மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக தேயிலை விவசாயம் திகழ்ந்து வருகிறது.

நீலகிரி : மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது நீலகிரி மாவட்டம். இம்மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பச்சைக் கம்பளம் போற்றியது போல் தேயிலை தோட்டங்கள் அனைவரின் கண்களுக்கும் விருந்தளித்து வருகிறது. இம்மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக தேயிலை விவசாயம் திகழ்ந்து வருகிறது.



இந்த தேயிலை விவசாயத்தில் சுமார் 65 ஆயிரம் சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகள் பசுந்தேயிலையை உற்பத்தி செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு காரணங்களால் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பல விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களை விற்று விட்டு தங்களின் வாழ்வாதாரத்திற்காகச் சமவெளி பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து வரும் அவலம் நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக அரங்கேறி வருகிறது.

பசுந்தேயிலை 

நீலகிரி மாவட்டத்தில் 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 25 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருந்து கொண்டு தங்களது தேயிலை தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலையை அந்தந்த தொழிற்சாலைக்கு விநியோகித்து வருகின்றனர். பசுந்தேயிலைக்கு கடந்த பல ஆண்டுகளாக போதிய விலை இல்லாத போதும் மாற்று தொழில் ஏதும் இங்கு இல்லாததால், கிடைக்கும் விலையைப் பெற்று தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு விலை நிர்ணைய குழுவை அமைத்து மாதந்தோறும் 10-ம் தேதிக்குள் குன்னூர் இங்கோ சர்வ் நிர்வாகத்தால் அறிவித்து வருகிறது. விலை நிர்ணையம் செய்த உடனே உறுப்பினர்களுக்கு அந்தந்த தொழிற்சாலை நிறுவனங்கள் மூலம் குறுஞ்செய்திகள் மூலம் விலை குறித்த பட்டியலை அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஆனால் தேயிலை வாரியம் மூலம் கிலோவுக்கு ரூ. 11.50 என நிர்ணையம் செய்தாலும் விவசாயிகளுக்கு 2 முதல் 4 ரூபாய் வரை குறைத்தே தொழிற்சாலை நிர்வாகம் அளித்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் சுமார் ரூ.20 கோடி வரை விவசாயிகளுக்கு அரசு கூட்டுறவு தொழிற்சாலைகள் நிலுவை வைத்துள்ளதாக விவசாயிகள் முக்கிய குற்றச்சாட்டாக முன் வைக்கின்றனர்.

மேலும் தற்போது வழங்கப்படும் விலை போதுமானதாக இல்லாததால் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் கூட வழங்க முடியாமல் தவித்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகமும், தேயிலை வாரியமும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், நீலகிரி தேயிலை தூளை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தேயிலை விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...