பாரதியார் பலகலை.,: ஊழலால் பாதிக்கப்பட்டவர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை

பாரதியார் பலகலைக் கழகத்தில் துணை வேந்தர் செய்த ஊழலால் பாதிக்கப்பட்டவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

கோவை: பாரதியார் பலகலைக் கழகத்தில் துணை வேந்தர் செய்த ஊழலால் பாதிக்கப்பட்டவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். 

சரியான தகுதிகள் இருந்தும் தங்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணிகள் ஒதுக்கவில்லை என பணியிடைநீக்கம் செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதி மீது ஒரு வருடத்திற்கும் முன்பாகவே  15 க்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருந்தனர். 



இந்த நிலையில், கணபதி கடந்த வாரம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக, கடந்த திங்கட்கிழமை அன்று மீண்டும் அந்த 15 பேர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். 

கணபதி-யால் முறைகேடான முறையில் பணியில் அமர்த்தப்பட்டவர்களை நீக்கம் செய்துவிட்டு முழுத்தகுதி உள்ள தங்களுக்கு அந்த பணிகளை ஒதுக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.  

புகார் செய்திருந்த 15 பேரில்  முதற்கட்டமாக 5 பேரிடம் நேற்று மாலை 7 மணி முதல் 8 மணி வரை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். எந்த வகையில் கணபதியால் பாதிக்கப்பட்டீர்கள்? என்பது குறித்த போன்ற விசாரணைகள் தங்களிடம்  மேற்கொள்ளப்பட்டதாக அருள்மீனா என்பவர் கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...