கோவையில் குரூப்-4 தேர்வுகள் நடைபெறும் மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

கோவையில் கோவையில் குரூப்-4 தேர்வுகள் நடைபெறும் மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை: கோவையில் கோவையில் குரூப்-4 தேர்வுகள் நடைபெறும் மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 க்கான போட்டித்தேர்வு தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வினை கோவையில் இருந்து மட்டும் 57,192 பேர் எழுதுகின்றனர்.

அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் , தேர்வு நடைபெறும் மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், " தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, இன்று குரூப்– 4 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் உள்ள 153 மையங்களில் 71,849 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 57,192 தேர்வர்கள் தேர்வெழுதினர். இத்தேர்வினை கண்காணிக்க 68 மொபைல் யூனிட்களும், 20 பறக்கும் படை குழுவும், 245 அறை கண்காணிப்பாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இத்தேர்வுகள் எவ்வித முறைகேடுகளுமின்றி சிறப்பாக நடைபெற்றது. தேர்வாளர்கள் சிரமமின்றி தேர்வு எழுத, தேர்வு மையங்களுக்குச் சென்றுவரும் வகையில் தேவையான சிறப்பு பேருந்து வசதி, பாதுகாப்பு வசதி, தளவாடங்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்வசதி போன்ற அடிப்படை வசதிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது." என்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...