திருப்பூர் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்காயிரம் கோழிகள் உயிரிழப்பு

வெள்ளகோவில் பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் உயிரிழந்தன.

திருப்பூர்: வெள்ளகோவில் பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் உயிரிழந்தன. 

வெள்ளகோவில் அருகேயுள்ள வேப்பம்பாளையம் பகுதியில் ஜெகதீசன் என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இன்று காலை நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது அவரது கோழி பண்ணை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

இதனையடுத்து ஜெகதீசன் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். 

இந்த தீ விபத்தில் பண்ணையிலிருந்த அனைத்து பிராய்லர் கோழிகளும் தீயில் கருகி உயிரிழந்தன. இறந்த கோழிகளின் மதிப்பு பல லட்ச ரூபாயாகும்.



அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த இன்னொரு கோழி பண்ணை தப்பியது. இதிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மின்சார கசிவின் காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...