ஜெயலலிதாவிற்கு புகழாரம் சூட்டிய இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.

சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் புகழாரம் சூட்டினர்.

சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் புகழாரம் சூட்டினர். 

சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் இன்று கலந்துகொண்டு பேசிய அவர், தமிழ்நாட்டை ஜெயலலிதா என்கிற தெய்வம் எங்களை வழிநடத்தி ஆட்சி செய்கின்றது. உலகத்தையே உற்று கவனிக்க வைத்தவர். வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப்பேரவையில் வரலாறு படைத்தவர் ஜெயலலிதா. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால்தான் தமிழக மக்கள் வளர்ந்தார்கள். வளர்ச்சித் திட்டங்கள், நலத்திட்டங்களை தந்துவிட்டு சென்றிருக்கிறார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சி என்பது அக்னியில் இருந்து மீண்ட பீனிக்ஸ் பறவை போன்றது. பல சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து 6 முறை முதலமைச்சராக இருந்துள்ளார். பூமி உள்ளவரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகழ் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

இவரைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையை எப்படி பயன்படுத்த வேண்டும் என தெரிந்து சரித்திரம் படைத்தவர் ஜெயலலிதா. தமிழக மக்களின் நலனுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. காவிரி நீரை பெற்றுதர பாடுபட்டவர். சட்டப்பேரவையில் தனி ஒருவராக வந்து சிங்கம் போல் கர்ஜித்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா இறப்பு செய்தியை கேட்டு கடலில் துடுப்பு இல்லாத படகு போல் தத்தளித்தோம். என்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...