சுகாதார சீர்கேட்டை கண்டித்து உதகை நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரம் சீர்கெட்டு வருவதாகக் கூறி இன்று நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரம் சீர்கெட்டு வருவதாகக் கூறி இன்று நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



சுற்றுலா நகரமான உதகையில் சுற்றுலா தலங்கள், சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், நகர மன்ற உறுப்பினர்கள் இல்லாததால் அனைத்து வார்டுகளிலும் கழிவு நீர் வழிந்தோடுவதால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும், போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருவதாகவும், போதிய பார்க்கிங் வசதியில்லாததால் கோடப்மந்து கால்வாய் மீது காங்கீரிட் கட்டிடம் அமைத்து வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நீலகிரி மாவட்ட தி.மு.க.,வினர் உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இக்கோரிக்கைகளை விரைவில் செயல்படுத்தாவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை மற்றும் மாவட்டம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...