முன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு 16-ம் தேதி வரை போலீஸ் காவல்

லஞ்சம் பெற்ற வழக்கில் பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியை 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கக் கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


கோவை: லஞ்சம் பெற்ற வழக்கில் பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியை 16-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

பேராசிரியர் நியமனத்துக்காக 30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கடந்த மூன்றாம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பட்டுள்ளார். இவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சார்பாக ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 9-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, வழக்கை மூன்று னத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார். 

அதன்படி, போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக, முன்னாள் துணைவேந்தர் கணபதி கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கணபதியை 16-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதனிடையே,  முதல்வகுப்பு கோரி முன்னாள் துணைவேந்தர் கணபதி தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளைக்கு (பிப்.,13) ஒத்திவைக்கப்பட்டது. மேலும், துணைவேந்தருக்கு தரமான உணவு வழங்கவும், துன்புறுத்தக் கூடாது எனவும் நீதிபதி போலீஸாருக்கு அறிவுறுத்தினார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...