அறிவுசார் காப்புரிமை தொடர்பாக ஒருநாள் கருத்தரங்கம்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் நவீன ஆராய்ச்சியின் வழியாகக் கண்டறியப்படும் புதிய, முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் மற்றும் அதன் வழிமுறைகளை முறைப்படி பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் நவீன ஆராய்ச்சியின் வழியாகக் கண்டறியப்படும் புதிய, முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் மற்றும் அதன் வழிமுறைகளை முறைப்படி பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. 

மத்திய அரசின் ராணுவ பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு மேம்பாட்டு மையத்தின் கருத்தரங்க கூடத்தில் நடந்த இந்தக் கருத்தரங்கை ரதியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) பி. வனிதா துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, பாரதியார் பல்கலைக்கழகத்தின் அறிவுசார் காப்புரிமை மையத்தின் இயக்குநர் த. பரிமேலழகன் உரை நிகழ்த்தினார். 

அவர் கூறியதாவது :- ஆராய்ச்சிகள் எப்போதும் சமூகநலம் சேர்ந்ததாகவும், நம் நாட்டின் நலனை மேம்படுத்துவதாகவும் அமைய வேண்டும். தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதன் மூலம்தான் நாம் காப்புரிமையை பெற முடியும். மருத்துவம், அறிவியல் துறைகளில் நாம் பல அறிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்தபோதும் அவற்றை முறைப்படி காப்புரிமை பெறாததால் நாம் நமது பாரம்பரிய பொருட்களுக்கான காப்புரிமையை இழந்துவிட்டோம். காப்புரிமைதுறை குறித்த அறிவை வளர்ந்துகொள்வதின் மூலம் புதிய கண்டுபிடிப்புகளைப் பதிவு செய்து காப்புரிமை பெறுவதுடன் நமது பாரம்பரிய அறிவுசார் காப்புரிமையை பாதுகாக்க முடியும். இவ்வாறு கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் பாரதியார் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், இளம் ஆராய்ச்சி மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், முதுநிலை அறிவியல் மற்றும் பொறியியல் துறை மாணவர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...