இயற்கை மரணமடைந்த தாயின் உடலை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கிய சமூக ஆர்வலர்

கோவையை அடுத்த குனியமுத்தூர் பகுதியில் இயற்கை மரணமடைந்த தனது தாயின் உடலை சமூக ஆர்வலர் ஒருவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளார்.

கோவை : கோவையை அடுத்த குனியமுத்தூர் பகுதியில் இயற்கை மரணமடைந்த தனது தாயின் உடலை சமூக ஆர்வலர் ஒருவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளார். 

குனியமுத்தூர் பகுதியைச்சேர்ந்தவர் ராஜா சேது முரளி. இவர் பசியாற சோறு என்ற அமைப்பை ஏற்படுத்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் தங்கியிருப்பவர்களுக்கு தினமும் மதியம் இலவசமாக உணவு வழங்கி வருகிறார். மேலும் அரசுப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கான சீருடைகள்,பேனா பென்சில் உட்பட பல பொருட்களையும், வசதியற்ற ஏழைக் கர்ப்பிணிப்பெண்களுக்கு இலவசமாக வளைகாப்பு செய்து பண உதவியும் அளித்து வருகிறார். 

இந்நிலையில், இவரது தாயார் வள்ளியம்மாள் (82), வயது முதிர்வு காரணமாக இயற்கை மரணமடைந்தார். இதனையடுத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரது தாயார் உடலை தானமாக வழங்கினார். 2013 ஆம் ஆண்டு உடல் தானம் செய்ய பதிவு செய்து இன்று வழங்கியிருக்கிறார். 

இதுகுறித்து ராஜா சேது முரளி கூறுகையில்,, 2013 ஆம் ஆண்டு உடல் தானம் செய்ய பதிவு செய்யப்பட்டதாகவும், தன்னுடைய தாய் வள்ளியம்மாள் இயற்கை மரணமடைந்ததை அடுத்து அரசு மருத்துவக்கல்லூரி அவரது தாயார் உடலை தானமாக இன்று ஒப்படைத்ததாக கூறினார். 

மேலும், அனைவரும் உடல் தானம் செய்ய முன் வர வேண்டும் என்றும் மண்ணுக்கும், தீக்கும் இரையாகும் உடலை மருத்துவ மாணவர்களின் உடற்கூறியல் கல்விக்கு தானமாக கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...