கோவையில் சுட்டெரிக்கப்போகிறது வெயில்

அடுத்த ஐந்து நாட்களுக்கு கோவையில் வெயில் சுட்டெரிக்க வாய்ப்புள்ளதாக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கோவை : அடுத்த ஐந்து நாட்களுக்கு கோவையில் வெயில் சுட்டெரிக்க வாய்ப்புள்ளதாக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

கோவையில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் குளிரும் காலை நேரங்களில் வெயிலும் வாட்டி வதைத்து வருகின்றன.

இந்நிலையில், கோவையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெயில் 30 டிகிரி முதல் 33 டிகிரி வரை சுட்டெரிக்க வாய்ப்புள்ளதாக கோவை வேளாண்மை பலகலைக் கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மைய துறைத் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து சிம்ளிசிட்டி-க்கு அவர் அளித்த பேட்டியில், " கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை கோடை காலம் என்பது முன்கூட்டியே தொடங்கிவிடும். அதாவது பிப்ரவரி மாதத்தில் தொடங்கி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும். நடப்பு ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையானது கோவை மாவட்டத்திற்கு சரியான அளவில் கிடைத்துள்ளது. 672 மி.மீ எதிர்பார்த்த நிலையில் 665 மி.மீ மழை பெய்துள்ளது. 

இதேபோல் கோடை மழையும் 132 மி.மீ பெய்தால் இந்தாண்டு வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்கலாம். 2015-ம் ஆண்டு இதே மழை அளவு கோடை மாதங்களில் விட்டு விட்டுப் பெய்த காரணத்தினால் கோவையில் வெயில் பெரிய அளவில் இல்லை. அதே போல் இந்தாண்டும் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் புதன் மற்றும் வியாழக்கிழமை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது." என்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...