வாட்ஸ்-ஆப்பினால் வாடிப்போன ரோஜா பூ விற்பனை

சமூக வலைதளங்களால் காதலர் தினத்தன்று அமோகமாக விற்பனையாகும் ரோஜா மலர்கள் தேக்கமடைந்திருப்பதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

கோவை : உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. காதலைக் கொண்டாடும் இந்நாளில், விருப்பமானவர்களுக்கு ரோஜா மலரை அன்பளிப்பாக கொடுத்து அவர்களின் மனதில் இடம்பிடித்துக் கொள்வது வழக்கம்.



 

ஒவ்வொரு காதலர் தினத்திலும் மனதைக்கவரும் சிகப்பு ரோஜாக்களின் விற்பனை அமோகமாக இருக்கும். ஆனால், இந்த டிஜிட்டல் யுகத்தில் காதலர் தினத்தன்று ரோஜா பூக்களை வாங்கி பரிசளிப்போர் எண்ணிக்கை குறைந்து கொண்டேவருகிறது.

விலை வாசி உயர்வு, போக்குவரத்து கட்டண உயர்வு, எரிபொருள் விலை ஏற்றம், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் ரோஜாப்பூக்களின் விலை அதிகரித்து அதன் விற்பனை சரிவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில், இன்றைய இளைஞர்கள் காதலை பரிமாறிக்கொள்ள வாட்ஸ்-ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களையே உபயோகிப்பதாக ரோஜாப்பூ விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து 'தி ஊட்டி ஃப்ளவர் ஷாப்'-ன் உரிமையாளர் கே.ஜெயந்த் குமார் கூறுகையில், " ஐந்து வருடங்களுக்கு முன், காதலர் தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே ரோஜாப்பூ விற்பனை தொடங்கிவிடும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவற்றின் விற்பனை சரிவு நிலையில் உள்ளது.

இன்றைய இளைஞர்கள் காதலை பரிமாறிக்கொள்வதற்குப் பூக்களை விட, செல்போன்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால், புதுமண தம்பதிகளும், காதலித்து மணமுடித்தவர்களும், ரோஜாப்பூக்களை அதிகம் வாங்கிச் செல்கின்றனர். அவர்களுக்காக, ரூ.500  முதல் ரூ.5௦௦௦ வரையில் பூங்கொத்துகள் விற்பனை செய்யப்படுகிறது. அந்த பூங்கொத்துக்கள் வாங்குபவரின் விருப்பத்திற்கேற்ப சிறப்பான முறையில் வடிவமைத்தும் கொடுக்கப்படுகிறது." என்றார். 



"தொழில்நுட்ப வளர்ச்சியால் தகவல் பரிமாற்றம் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உறவுகளுக்குள் ஏற்படும் இடைவெளியும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வாழ்த்து செய்தி முதல் துயர செய்தி வரை அனைத்தையும் ஒற்றை நொடியில் சொடுக்கி விட்டு, அடுத்த வேலையை பார்க்கச் சென்றுவிடுகிறோம். இதனால்தான், கடிதம் எழுதுவது, வாழ்த்து அட்டைகளை பரிமாறிக்கொள்வது போன்ற பழக்கங்கள் காணாமல் போய்விட்டன.

 

தொடுதிரையோடு வாழும் இந்த வாழ்க்கை முறை, பல மனச்சிக்கல்களை உண்டாக்கும். வருடத்தில், ஒரு நாளாவது செல்போன்களை கழட்டிவிட்டு, கைகளில் ரோஜாப்பூக்களோடு காதலனின் கைபிடித்து நடக்க முயற்சி செய்ய வேண்டும்" என்கிறார் உளவியல் துறை இறுதி ஆண்டு மாணவி இலக்கியா.



ஊட்டி, பெங்களூர் மற்றும் ஒசூர் போன்ற நகரங்களிலிருந்து கொண்டுவரப்படும், ரெட் ரோஸ், ரெட் கார்னேஷன் (ஏற்றுமதியாகும் ரோஜா) போன்றவை காதலர் தினத்தன்று அதிகம் விற்பனையாகும் வகைகள். சாதாரண நாட்களில் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையாகும் இந்த பூக்கள், இன்றும் நாளையும் ரூ.20 முதல் ரூ.40 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

"காதலைப் பரிமாறிக்கொள்ள தற்போது ஏராளமான வழிகள் வந்துவிட்டன. விதவிதமான புத்தாடைகள், விலை உயர்ந்த அணிகலன்கள், அழகிய பொம்மைகள், சாக்லேட் போன்ற இனிப்பு வகைகள் என ஏராளமான பொருள்களை விரும்பி வாங்கி தனக்கு விருப்பமானவர்களுக்குப்  பரிசளிக்கிறது இன்றைய இளைய தலைமுறை. ஆனால், காதலர் தினத்தன்று பரிசாக வழங்கப்படும் எளிமையான, மெல்லிய சிகப்பு ரோஜாக்கள் மிகவும் சிறப்பானவை. அவை, காதலர்களுக்குள் இருக்கும் காதலை மேலும் மென்மையாக்கும்.  அந்த மலர்கள் இரண்டொரு நாட்களில் வாடிப்போனாலும், அது தந்த நினைவுகள் வாடாமல் மனதில் வாழ்பவை" என்றார் தனது பேரனோடு ரோஜாப்பூச்செண்டு வாங்கிச்சென்ற அறுபது வயது காதலன்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...