வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலத்தை மீட்டுத் தரக்கோரி முற்றுகைப் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பி.ஏ.பி. வாய்க்காலில் 5 நாட்களுக்கு முன் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் உடலை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் டி.எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் பி.ஏ.பி. வாய்க்காலில் 5 நாட்களுக்கு முன் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் உடலை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள்  டி.எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 



பல்லடத்தை அடுத்த தொட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான பரமசிவன் மற்றும் ரஞ்சிதா தம்பதியினரின் மகன் தரணீஸ். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது தாத்தாவுடன் பொங்கலூர் பி.ஏ.பி வாய்க்காலுக்கு துணி துவைக்கச் சென்றிருந்த போது, வாய்க்காலில் தவறி விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சிறுவனின் பெற்றோருக்கும் அவினாசி பாளையம் காவல்நிலையத்திற்கும் அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்தனர். தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், திருப்பூர் தீயணைப்பு துறையினர் மற்றும் சிறுவனது உறவினர்கள் உதவியுடன் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அன்று இரவு வரை தேடியும் சிறுவனது உடல் கிடைக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து, கடந்த 4 நாட்களாக சிறுவனின் உறவினர்கள் மட்டும் பொங்கலூர் முதல் காங்கேயம், வெள்ளகோவில் வரை சிறுவனின் உடலைத் தேடியுள்ளனர். இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதனால், ஆத்திரம் அடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் அவனது உறவினர்கள் பல்லடம் டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து சிறுவனின் உறவினர்கள் கூறும் பொழுது, ''கடந்த வெள்ளிக்கிழமையன்று எங்களது சிறுவன் பொங்கலூர் பி.ஏ.பி. வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டான். அன்று மட்டும் அவனைத் தேடுவதற்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உதவி செய்தனர். ஆனால், கடந்த 4 நாட்களாக நாங்கள் மட்டும் தேடி வருகின்றோம். எங்களுக்கு யாரும் எந்தவிதமான உதவியும் செய்யவில்லை. எனவே, வாய்க்காலில் தவறி விழுந்த சிறுவனின் உடல் கிடைப்பதற்கு எங்களுக்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம்.'' இவ்வாறு கூறினார். 

இதனிடையே, பல்லடம் டி.எஸ்.பி அலுவலகத்தில் இல்லாத காரணத்தினால் அவினாசிபாளையம் காவல்நிலையத்திற்கு செல்லுமாறு அங்கிருந்த அதிகாரிகள் அவர்களை அவினாசிபாளையம் காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...