ஈஷா யோக மையத்தில் மகாசிவராத்திரி விழா கோலாகலக் கொண்டாட்டம்

24வது ஈஷா மகாசிவராத்திரி விழா 112 அடி ஆதியோகி சிலை முன்பு சத்குரு முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

கோவை : 24வது ஈஷா மகாசிவராத்திரி விழா 112 அடி ஆதியோகி சிலை முன்பு சத்குரு முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 



இந்த விழாவில், ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் புதுச்சேரி முதலமைச்சர் வி. நாராயணசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் 'சொல்லேருழவன்' செல்லமுத்து, நடிகை தமன்னா பாட்டியா உள்ளிட்ட பல பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டனர். 



மேலும், தமிழகத்தில் இருந்து மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் துவக்கத்தில் லிங்க பைரவி தேவியின் உற்சவ மூர்த்தி பிரமாண்ட ஊர்வலமாய் ஆதியோகி திருவுருவச்சிலை முன்பு வந்தடைந்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.



உலக மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், நல்வாழ்வு வழங்கவல்ல யோகக் கலையை உலகமக்கள் அனைவருக்கும் எடுத்து செல்வதை குறிக்கும் விதமாக சத்குரு மகாயோக யோகேஸ்வரலிங்கம் முன்பு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 



இரவு முழுவதும் அனைவரும் விழித்திருக்கும் வண்ணம் துள்ளலான இசை நிகழ்ச்சிகளில் வழங்குவது ஈஷா மகாசிவராத்திரியின் தனிச்சிறப்பாகும்.  இவ்வருடம் புகழ்பெற்ற பாடகர் சோனுநிகாம் மற்றும் தலெர்மெஹந்தி, மோஹித் சவுஹான் மற்றும் சியன் ரொனால்டோ ஆகியோரின் இசைநிகழ்ச்சிகள் மக்களை முழு இரவும் விழிப்பாக உற்சாகமாக வைக்கும் மருந்தாக இருக்கும் எனத் தெரிகிறது.



மேலும், சந்தோஷ் ஷெட்டி குழுவினர் மற்றும் மணிப்பூர் ட்ரம்மர்ஸ் வழங்கும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. சௌண்ட்ஸ் ஆப் ஈஷா (Sounds of Isha ) இசைக்குழுவினரின் உற்சாகமான இசைதொகுப்புகளும் அரங்கேறியது. மற்றும் 117 தன்னார்வலர்கள் ஆதியோகிக்கு அர்பணிக்கவிருக்கும் மகா ஆரத்தி அர்ப்பணிப்பு நடனமும் நடைபெற்றது. முக்கியமாக சத்குரு சொற்பொழிவுகளும், மகாமந்திர உச்சாடனையும், நள்ளிரவு தியானமும் பார்வையாளர்களை விழிப்புடனும், உற்சாகத்துடனும் தியான நிலைஉணரவும் வழிவகுத்தது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...