நீலகிரியில் பிறந்து 2 வாரங்களே ஆன இரு பெண்குட்டி புலிகள் உயிரிழப்பு

நீலகிரியில் பிறந்து 2 வாரங்களே ஆன இரண்டு பெண்குட்டி புலிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வனஉயிர் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி : நீலகிரியில் பிறந்து 2 வாரங்களே ஆன இரண்டு பெண்குட்டி புலிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வனஉயிர் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி வனசரகத்திற்குட்பட்ட அவரல்லா வனப்பகுதியில் இரண்டு புலிக்குட்டிகள் உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று ஆய்வு நடத்திய வனத்துறையினர், உயிரிழந்த இரு பெண்குட்டி புலிகளும் பிறந்து இரண்டு வாரங்களே ஆகியிருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், தாய் புலி இறை தேடச் சென்ற நேரத்தில், குட்டி புலிகள் வேறு ஏதேனும் வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் கூறினர். 

இதையடுத்து, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ரெட்டி, துணை இயக்குநர் சரவணன் முன்னிலையில் கால்நடை மருத்துவர் பொன்கலைவானி குட்டி புலிகளின் உடல்களை உடற்கூறு பரிசோதனையை செய்தார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...