குட்டி யானைக்கு ஆலிவ் மசாஜ்

முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு முகாமில் வளர்க்கப்படும் குட்டி யானைக்கு நாள்தோறும் ஆலிவ் ஆயில் தேய்த்து உடல் மெருகேற்றப்படுகிறது.

நீலகிரி : முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு முகாமில் வளர்க்கப்படும் குட்டி யானைக்கு நாள்தோறும் ஆலிவ் ஆயில் தேய்த்து உடல் மெருகேற்றப்படுகிறது.



ஓசூர் வனக்கோட்டம், தேன்கனிக்கோட்டம் வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் தாயை பிரிந்து எட்டு மாதமான ஆண் குட்டி யானை தவித்து வந்தது. 

உடலில் கயங்களுடன் அந்த குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் அதை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையிலான குழுவினர் குட்டி யானைக்கு சிகிச்சை அளித்தனர். 

தற்போது அதன் உடல்நலம் நன்றாக முன்னேற்றம் கண்டுள்ளது. குட்டி யானையை பராமரிக்கும் வகையில், தனியாக கூண்டு அமைத்து அதனுள் இரவில் வெப்பம் தொடரும் வகையில் 'வாம்மர்' வைக்கப்பட்டதோடு வைக்கோல் மெத்தையும் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் அதனை பராமரிக்கும் வகையில் பொம்மன் என்ற பாகனும் அவரது மனைவி நியமிக்கப்பட்டனர்.  

ஒரு குழந்தை எவ்வாறு தனது தாய், தந்தையரை பிரிந்து இருக்காதோ அதே போன்று, இந்த குட்டியானையும் இருவரையும் பிரிந்து இருக்காது. இரவில் குட்டி யானையுடன் உறங்கும் இவர்கள், அதனைக் குளிப்பாட்டுவது, புற்களை ஊட்டி விடுவது, பால் கொடுப்பது,  வெயில் உலர்த்துவது என தனிப்பாசத்துடன் இந்த குட்டி யானையை கவனித்து வருகின்றனர்.

இருவரும் கூண்டுக்குள் வந்துவிட்டால், குட்டியும் ஓடிவந்து, அவர்களை தனது தும்பிக்கையால் பிடித்துக்கொள்ளும் காட்சியும், சமையலறையில் பாத்திர சப்தம் கேட்டால் ஓடிவந்து எட்டி பார்ப்பதும் அனைவரும் கவர்ந்து வருகிறது.

தற்போது, உடல் நலம் தேறியுள்ள யானைக்கு தினசரி மருத்துவ சிகிச்சை, சத்து மருந்துகள் வழங்கப்படுவதுடன், தினசரி காலையில் குளிப்பாட்டியவுடன், அதன் உடல் முழுவதும் ஆலிவ் ஆயில் தேய்த்து மசாஜ் செய்யப்படுகிறது.

இதனால் யானைக்குட்டியின் உடலில் பளபளப்பு ஏற்பட்டு மெருகுடன் காட்சி அளிக்கிறது. குட்டியின் அருகே யார் சென்றாலும், பாகன் பொம்மனிடம் ஓடிச் சென்று மறைந்து கொள்கிறது.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், "இந்த யானை குட்டியின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பை கருதி, சுற்றுலாப் பயணிகள் யாரையும் அருகே விடவோ, தொடவோ அனுமதிப்பதில்லை. இதனால் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தூரத்திலிருந்து குட்டியின் சேட்டைகளை ரசித்து செல்லாம். யானை தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளது." என்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...