வால்பாறையில் சிக்கிய சிறுத்தையை வனப்பகுதிக்குள் விட்ட வனத்துறையினர்

கோவை மாவட்டம் வால்பாறையில் கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்ட சிறுத்தையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்ட சிறுத்தையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். 



வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட்டில் கடந்த 8-ம் தேதி மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முத்தலி என்பவரின் 4 வயது மகன் செய்துலை சிறுத்தைப்புலி இழுத்துச் சென்று கொன்றது. இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் குழந்தையை கொன்ற சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். வனத்துறையினர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிறுவனை தாக்கிக் கொன்ற சிறுத்தைப்புலியை பிடிப்பதற்கு 4 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. 

நடுமலை எஸ்டேட் உயிரிழந்த சிறுவனின் வீட்டிற்கு அருகாமையில் ஒரு கூண்டும், வால்பாறை சி.எஸ்.ஐ. ஆலயம் அருகாமையில் ஒரு கூண்டும், வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகாமையில் நல்லகாத்து சாலையில் ஒரு கூண்டும், காமராஜர் நகர் பகுதியில் ஒரு கூண்டும் என நான்கு கூண்டுகள் வைத்து 4 கேமராக்கள் பொருத்தி இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.



இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் சிறுவனை தாக்கிக் கொன்ற சிறுத்தைப்புலி நடுமலை எஸ்டேட்டில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுவனின் வீட்டிற்கு அருகாமையில் வைக்கப்பட்டிருந்த கூண்டிற்குள் சிக்கியது. இதனால், பொதுமக்கள் அனைவரும் நிம்மதியடைந்தனர். உடனே மாவட்ட வன அலுவலர் முகமது மனாப் (பொறுப்பு), வனத்துறை அதிகாரிகள் சக்திவேல் மற்றும் சேகர், ஓய்வுபெற்ற வனஅலுவலர் தங்கராஜ் மற்றும் 50-க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள், வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் சிறுத்தை பிடிபட்ட இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர், ஓய்வு பெற்ற வனஅலுவலர் தங்கராஜ் பிடிபட்ட சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறை வாகனத்தில் ஏற்றினர். நடுமலை எஸ்டேட்டில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட மந்திரி மட்டம் என்ற அடர்ந்த வனப்பகுதிக்குள் பிடிபட்ட சிறுத்தைப்புலியை கொண்டு சென்று விட்டனர். இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...