”எய்ம்ஸ் விவகாரத்தில் தமிழக அரசு தெளிவான முடிவை தெரிவிக்க வேண்டும்”

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடம் தொடர்பாக தமிழக அரசு தெளிவான முடிவை மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை : எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடம் தொடர்பாக தமிழக அரசு தெளிவான முடிவை மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் 1988 கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் நடைபெற்றது. 20 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியை முன்னிட்டு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  கொச்சின் சிப் யார்டு பகுதியில் நடந்த கப்பல் விபத்து தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை, ஆய்வு பணிகள், இழப்பீடு உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக விரிவாக விளக்கினார். 

தொடர்ந்து அவர் பேசுகையில், எடப்பாடி அரசு ஒராண்டை நிறைவு செய்ததே சாதனை. இக்கட்டான சூழ்நிலையில் ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள். சுப. உதயகுமாருக்கு அமலாக்கத்துறையினர் நோட்டிஸ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக பொது மேடையில் விவாதிக்க தயாராக இருக்கிறோம். தமிழக அரசு சுப. உதயகுமாரிடம் கவனமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் கிழக்கு, தெற்கு, வடக்கு மாவட்டங்கள் வளர்ச்சி என்பது இல்லை. மேற்கு மாவட்டங்களின் வளர்ச்சியாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும். 

கோவில்களில் லாபத்திற்காக புதிய வழிபாட்டு முறைகளை அரசு கொண்டு வருகின்றனர். கோவில்களை சந்தையாக மாற்ற அரசாங்கத்திற்கு யார் அனுமதி அளித்தது..?. மத்திய அரசாங்கம் கொடுக்கும் நிதியை கொடுக்க மாட்டோம் என மாநில அரசு சொன்னால் அது மக்களுக்கு செய்யும் துரோகமாகும். ஆட்சி செய்வதற்கு அருகதை அற்றவர்கள். 

முன்னதாக, அஞ்சலி நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அவர், தமிழகம் அமைதி பூங்காவாக இல்லையென்றும், ஆட்சியில் உள்ளவர்கள் அதை புரிந்துக்கொள்ள வேண்டும் என்றார். மேலும், அடுத்தாண்டு அஞ்சலி கூட்டத்திற்காவது மாநில அரசு அனுமதி ஆணை பிறப்பிக்க வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...