கொண்டாடும் கர்நாடகம்; திண்டாட்டத்தில் தமிழகம்

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் நீரை 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைத்தும் கர்நாடகத்திற்கு வழங்கப்படும் நீரின் அளவை அதிகரித்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.



காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் நீரை 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைத்தும் கர்நாடகத்திற்கு வழங்கப்படும் நீரின் அளவை அதிகரித்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

காவிரி நீரை பங்கிடுவதில் பல்வேறு ஆண்டுகளாக இரு மாநிலங்களுக்கும் இடையில் பிரச்சனையை எழுந்துவந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அதில், காவிரியில் தமிழகத்திற்கு இருந்து 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 192 டி.எம்.சி. நீர் கேட்டிருந்த நிலையில் தற்போது குறைத்து வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், காவிரியில் இருந்து கர்நாடகத்திற்கு நீரை அதிகரித்து உத்தரவு வெளியாகியுள்ளது. 

உச்ச நீதிமன்ற தீர்ப்பு விபரங்கள் : 

* காவிரியில் தமிழகத்திற்கு இருந்து 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைப்பு.

* கர்நாடகத்திற்கு கூடுதல் டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும்.

* தமிழகத்திற்கு 177.25 தண்ணீர் மட்டுமே வழங்க முடியும்.

* பாண்டிச்சேரிக்கு மற்றும் கேரளத்திற்கு வழங்கப்படும் நீர் அளவில் எந்த மாற்றமும் இல்லை.

* தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல் முறையீடு செய்ய முடியாது : 15 ஆண்டுகளுக்கு இந்த தீர்ப்பு அமலில் இருக்கும் 

* தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி., கர்நாடகத்திற்கு 184.75 டி.எம்.சி.

* மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். 

* காவிரி மேலாண்மை வாரியம் குடியரசுத் தலைவரின் மேற்பார்வையில் செயல்பட வேண்டும்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...