வெண்புள்ளிகளை நீக்கும் மருந்து குறித்து கருத்தரங்கம்

வெண்புள்ளிகளை நீக்கும் மருந்து தொடர்பாக கோவை இந்திய தொழில் வர்த்தக சபையில் வரும் 18-ம் தேதி கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

கோவை: வெண்புள்ளிகளை நீக்கும் மருந்து தொடர்பாக கோவை இந்திய தொழில் வர்த்தக சபையில் வரும் 18-ம் தேதி கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

வெண்புள்ளிகள் என்பவை தோலின் மேற்பரப்பில் திட்டுத் திட்டாகவோ அல்லது புள்ளி வடிவிலோ காணப்படுபவை. தமிழகத்தில் மட்டும் சுமார் 37 லட்சம் பேர், இந்திய அளவில் சுமார் 6 கொடி பெரும் வெண்புள்ளிகளை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

பரவாத தன்மையுடைய இந்த வெண்புள்ளிகள் சமுதாயத்தில் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கி வருகிறது.

இதனால் சிலர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு தற்கொலை முடிவையும் எடுத்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெண்புள்ளிகளை கொண்டவர்களின் இந்த மன நிலையை பயன்படுத்தி சில கும்பல் வசீகர விளம்பரங்கள் செய்கின்றனர். ஆனால், பணத்தைப் கொடுத்து அவர்கள் ஏமாற்றமடைவதே நிதர்சனம்.

இந்த நிலையில், வெண்புள்ளி உள்ளவர்கள், தாங்கள் இழந்தாய் நிறத்தை மீண்டும் பெற மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மருந்தினைக் கண்டுபிடித்துள்ளது.

இந்த மருந்தினை தொடர்ந்து 300முதல் 400 நாட்கள் வரை எடுத்துக்கொண்டால் வெண்புள்ளிகள் மறைந்து இயல்பான பழைய நிறம் திரும்பும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை  அவினாசி சாலையில் உள்ள   இந்திய தொழில் வர்த்தக சபையில் வரும் 18-ம் தேதி கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

வெண்புள்ளி உள்ளவர்கள் தங்களது பெயர் விபரங்களை 04422265507 / 04422265508 அல்லது 9840052464 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்றும் 2 மாதத்திற்கான மருந்தின் விலை ரூ.2015 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...