தொழில் முனைவோர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பல்துறை உரிமங்கள் பெற்றுத் தருவது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை: சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பல்துறை உரிமங்கள் பெற்றுத் தருவது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 



தமிழ்நாடு தொழில்நிறுவன வசதி அமைப்பு அவசர சட்டம் 2017-ஐ தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அவசர சட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான பல்துறை உரிமங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சம்மந்தப்பட்ட துறைகளிடமிருந்து  மாவட்ட அளவிலான ஒற்றைச் சாளர இடர் நீக்க வசதி அமைப்பு குழு மூலம் விரைந்து பெற்று தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட முறைகளை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் கொண்டு சேர்க்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசுகையில், "கோயம்புத்தூர் மாவட்ட அளவிலான வசதி அமைப்பு குழு மாதத்திற்கு இரண்டு முறை கூடி மாவட்டத்தில் புதிதாக தொழில் துவங்க உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அனுமதிகளை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பெற்றுத்தரும். மேலும், இந்த அவசர சட்டத்தின் படி, தகுதியான தொழில் நிறுவனங்களுக்கு காலக்கெடுவுக்குள் ஒப்புதல் வழங்காத துறைகள் மீது அதிகபட்சம் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும். தவறான தகவல் அளித்து விண்ணப்பம் அளிக்கும் தொழில் நிறுவனத்தின் மீது ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும்." என்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...