துடியலூரில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.

கோவை: கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார். 

துடியலூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் நேற்று இரவு நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பார்த்திபன் மற்றும் பிரவீன் குமார் ஆகியோரை அவர்களது நண்பர் அஜித்குமார் என்பவர் கத்தியால் குத்தியுள்ளார். இதில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பார்த்திபன் பரிதாபமாக உயிரிழந்தார், பிரவீன்குமார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொலை செய்த அஜித்குமாரை துடியலூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

துடியலூரை அடுத்த அப்பநாயக்கன்பாளையத்தில் குடியிருந்து வருபவர் பார்த்திபன். இவர், தனியார் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டு பகுதி நேரமாக பி.இ பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரது, நண்பர்களான பிரவீன்குமார் மற்றும் அஜித்குமார் ஆகியோர் வெள்ளக்கிணறு ஹவுசிங்யூனிட் பகுதியில் குடியிருந்து வருகின்றனர். இதில், பிரவீன் எலக்டானிக் சர்வீஸ் கடையில் வேலை செய்து வருகின்றார். அஜித் மீன்கடையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், அஜித்குமார் தனது இருசக்கர வாகனத்திற்கு பணம் கட்ட வேண்டும் என பார்த்திபனிடம் பணம் கேட்டுள்ளார். இது சம்பந்தமாக பேச மூவரும் மது அருந்திவிட்டு துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிக் கைகலப்பாக மாறியுள்ளது. இதில், அஜித்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து பார்த்திபனை குத்தியுள்ளார். அதனைத் தடுக்க வந்த பிரவீன் குமாரையும் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

இதையடுத்து, அருகில் இருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்த இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிகிச்சை பலனின்றி பார்த்திபன் உயரிழிந்தார். பிரவீன்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தகவலறிந்த துடியலூர் போலீசார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரவின்குமாரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய அஜித்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...