கோவையில் கர்நாடகா கூட்டமைப்பை முற்றுகையிட்ட த.பெ.தி.க.,வினர் கைது

காவிரி விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் உள்ள கர்நாடக கூட்டமைப்பு கட்டிடத்தை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கோவை: காவிரி விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் உள்ள கர்நாடக கூட்டமைப்பு கட்டிடத்தை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

காவிரி நதி நீர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் நீரில் 14.75 டி.எம்.சி. நீரைக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்தத் தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, கோவை டாடாபாத் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். ஊர்வலமாக வந்து அப்பகுதியில் உள்ள கர்நாடகா கூட்டமைப்புக்கு சொந்தமான கட்டிடத்தை முற்றுகையிட முயன்றனர்.



காவல் துறையினரின் தடுப்புகளை மீறி செல்ல முயன்றதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழகத்திற்கு அநீதி இழைக்கும் வகையில் கர்நாடகாவிற்கு சாதகமாக அமைந்துள்ளது எனவும், இத்தீர்ப்பை எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவ்வமைப்பினர் தெரிவித்தனர். 

இதையடுத்து போராட்டம் நடத்திய 20 க்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...