பயன்பாடு குறைவால் 3 ரயில் நிலையங்கள் மூடல்

மிகக்குறைந்த பயன்பாடு காரணமாக தனியாரால் இயக்கப்படும் சேலம், நாமக்கல் தடத்தில் மற்றும் ஈரோடு திருச்சி தடத்தில் உள்ள 3 ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


கோவை : மிகக்குறைந்த பயன்பாடு காரணமாக தனியாரால் இயக்கப்படும் சேலம், நாமக்கல் தடத்தில் மற்றும் ஈரோடு திருச்சி தடத்தில் உள்ள 3 ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மத்திய ரயில்வே வாரிய வணிகத்துறையின் 24.06.2005 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 26/2005-ன் படி, அதிக ரயில்கள் இயக்கமில்லாத வழித்தடங்கள் உள்ள தனியாரால் இயக்கப்படும் ரயில்நிலையங்களில் ஒரு நாளைக்கு அங்கிருந்து ரயிலில் ஏறிச்செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்த பட்சம் 25-ஆவது இருக்க வேண்டும். ஆனால், ஏப்ரல் 2017 முதல் டிசம்பர் 2017 வரையிலான 9 மாத கால கட்டத்தில் கீழ்க்கண்ட 3 ரயில்நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள படியால், அந்த ரயில்நிலையங்களில் பயணிகள் ரயிலின் நிறுத்தாமல், அந்த ரயில்நிலையங்களையும் கீழ்க்கண்ட தேதிகளில் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, சேலம் கரூர் தடத்தில் ராசிபுரம் களங்காணி இடையே உள்ள புதுச்சத்திரம் ரயில்நிலையம் வரும் 19-ம் தேதி முதல் மூடப்படுகிறது. அதே போல் சேலம் கரூர் தடத்தில் நாமக்கல் மோகனூர் இடையே உள்ள லட்டிவாடி ரயில்நிலையமும், கரூர் திருச்சி தடத்தில் ஜீயனூர் முத்தரசநல்லூர் இடையே உள்ள மேக்குடி ரயில்நிலையம் வரும் 19-ம் தேதி மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...