கோவை டைஸ் டி-20 கிரிக்கெட் போட்டியில் ஜி.சி.டி கல்லூரி அணி சாம்பியன்

என்ஜினியரிங் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜி.சி.டி., கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

கோவை : என்ஜினியரிங் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜி.சி.டி., கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. 

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் இணைந்து கோவை டைஸ் என்னும் அமைப்பினை நிறுவி, அதன் மூலம் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இவ்வமைப்பு அனைத்துப் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்காக டி-20 கிரிக்கெட் போட்டியினை கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கோவைப்புதூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது. இதில், மொத்தம் 40 கல்லூரி அணிகள் பங்கேற்றன. 

இறுதியில் நான்கு அணிகள் தேர்வு பெற்று அரை இறுதி மற்றும் இறுதி போட்டியில் பங்கேற்றது. இறுதிப் போட்டியில், ஜி.சி.டி., கல்லூரி அணி, ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஜி.சி.டி., அணி 20 ஓவரில், ஏழு விக்கெட் இழப்புக்கு 95 ரன் எடுத்தது. அணியில் சிறப்பாக பேட் செய்த பிரசன்னா 38 ரன் எடுத்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் கார்த்திகேயன் 4 ஓவர் வீசி 11 ரன் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்து களமிறங்கிய ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு, 84 ரன் மட்டுமே எடுத்தது. ஜி.சி.டி., அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இரண்டாம் இடத்தை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மூன்றாம் இடத்தை ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியும், நான்காம் இடத்தை ஜே.சி.டி பொறியியல் கல்லூரியும் பிடித்தது.  

இப்போட்டிகளை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி தொடங்கி வைத்தார். பரிசளிப்பு நிகழ்ச்சியில், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சண்முகம் கவுதமன் பரிசு கோப்பைகளை வழங்கி பாராட்டினார். இதில், இக்கல்லூரியின் முதல்வர் ஜேனட் மற்றும் அனைத்துக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர்கள் பங்கேற்றனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...