காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது : முதலமைச்சர்

தமிழகத்திற்கான காவிரி நீரின் அளவு குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை: தமிழகத்திற்கான காவிரி நீரின் அளவு குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டம் குன்னூர் முத்தாலம்மன் திருக்கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் தமிழகத்திற்கு,192 டி.எம்.சி. நீர் என்பதை 14.75 டி.எம்.சி.யாக குறைத்து உச்சநீதிமன்ற காவிரி வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது ஏமாற்றமளிக்கிறது. 

நதிகள் தேசிய சொத்து 24,24,708 லட்சம் பாசனப்பரப்பு தமிழகத்தில் உள்ளதை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்ற தீர்ப்பில் வரவேற்புக்குரிய அம்சமாகும். சட்டப்போராட்டத்தின் மூலமாக ஜெயலலிதாவால் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்தான் தற்போது தமிழகத்திற்கு தீர்ப்பின் மூலம் நீதி வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து தீர்வு காணப்படும். பல ஆண்டுகளாக எதிர்பார்த்த காவிரி மேலாண்மை வாரியம், காவிரி முறைப்படுத்தும் குழு 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பின் உத்தரவை மத்திய அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன். மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தொழிற்சங்கங்களை அழைத்து பேசி முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...