காதலை ஏற்க மறுத்த மாணவிக்கு தீ வைத்த இளைஞர் கைது

மதுரை அருகே காதலிக்க மறுத்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர் பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.

மதுரை அருகே காதலிக்க மறுத்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர் பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.

திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டைச் சேர்ந்த பாலமுருகன் (23), அச்சம்பட்டி பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். தன்னை காதலிக்கும்படி அந்த மாணவியை பாலமுருகன் வற்புறுத்தி உள்ளார். இது தொடர்பாக அந்த மாணவி, தனது பெற்றோரிடமும் கூறியுள்ளார். 

இந்த நிலையில், மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பாலமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இருந்த பாலமுருகன், காதலர் தினத்தன்று பள்ளிக்குச் சென்ற மாணவியை வழிமறித்துக் காதலிக்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். இதற்கு அந்த மாணவி மறுத்ததால், அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு பாலமுருகன் தலைமறைவாகி உள்ளார். படுகாயம் அடைந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அச்சம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த பாலமுருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...