முத்தாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முத்தாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முத்தாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். 

குன்னூர் முத்தாளம்மன் திருக்கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை வந்தார். இங்கிருந்து, சாலை மார்க்கமாக அவர் நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு சென்றார். அங்கு, அவரை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், முத்தாளம்மன் ஆலயத்திற்குச் சென்ற முதலமைச்சர் பழனிசாமி, கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தார். 



இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, , இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...