"காவிரி நீரை இன்றே திறந்துவிட்டாலும் 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் காய்ந்துவிடும்"

உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படி காவிரி நீரை இன்றே திறந்துவிட்டாலும் 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் காய்ந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படி காவிரி நீரை இன்றே திறந்துவிட்டாலும் 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் காய்ந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர்  நல்லசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் கொண்டாடியது மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஓராண்டில் செய்த சாதனை. இதற்காக குறைந்தது 60 நாட்கள் வீணடித்ததை தான் ஓராண்டு சாதனை என்று கருதுகிறார்கள். அரசுப் பணிகளை கவனிக்காமல் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்ததிட வேண்டுமா? என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் படி காவிரி நீரில் 14.75 டி.எம்.சி நீரை இழந்துள்ளோம். தமிழகத்தில் விவசாயிகள் பயன்படுத்தி வந்த 10 டி.எம்.சி நீரை தற்போது கர்நாடகா தொழிற்சாலைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலையின் கழிவு நீர் காவிரி நீரில் கலக்கப்படு அபாயம் ஏற்பட்டுள்ளது. உரிமை நீரை இழந்து கழிவு நீரை பெறும் தீர்ப்பாகவே இந்த தீர்ப்பினைக் கருதுகிறோம்.

காவிரி பிரச்சனையில் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி. அரசுகள் பிரித்து ஆளுகின்ற சூழ்ச்சியை கையாண்டு வருகின்றன. தமிழ்நாட்டையும், கர்நாடகத்தையும் மோத விட்டு காவிரி பிரச்சனையில் வேடிக்கை பார்த்து வருகின்றனர். இந்தத் தீர்ப்பே அதற்கு சாட்சியாகும். கர்நாடகாவில் தற்போது தேர்தல் வர உள்ளது. இதனை எதிர்பார்த்தும் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் படி காவிரியில் தண்ணீர் திறந்து விட்டாலும் 5 இலட்சம் ஏக்கர் நெல் பயிர்கள் கருகி விடும். இதனால் தமிழ்நாட்டு விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்திக்க இருக்கின்றனர். இதன் விளைவு தற்கொலைக்கு தூண்டும்." என்று அவர் பேசினார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...