கோவையில் வெண்புள்ளிக்கான மருந்து வெளியீடு

மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த வெண்புள்ளிக்கான மருந்து இன்று கோவை இந்திய தொழில் வர்த்தக சபையில் வெளியிடப்பட்டது.

கோவை : மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த வெண்புள்ளிக்கான மருந்து இன்று கோவை இந்திய தொழில் வர்த்தக சபையில் வெளியிடப்பட்டது. 



வெண்புள்ளிகள் என்பவை தோலின் மேற்பரப்பில் திட்டுத் திட்டாகவோ அல்லது புள்ளி வடிவிலோ காணப்படுபவை. தமிழகத்தில் மட்டும் சுமார் 37 லட்சம் பேர், இந்திய அளவில் சுமார் 6 கொடி பெரும் வெண்புள்ளிகளை கொண்டவர்களாக இருக்கின்றனர். பரவாத தன்மையுடைய இந்த வெண்புள்ளிகள் சமுதாயத்தில் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கி வருகிறது.



இந்த நிலையில், வெண்புள்ளி உள்ளவர்களுக்கான கருத்தரங்கம் மற்றும் அதற்கான மருந்து வெளியிடும் நிகழ்ச்சி இன்று கோவை இந்திய தொழில் வர்த்தக சபையில் நடைபெற்றது. இதில் வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் டாக்டர்.உமாபதி கலந்து கொண்டு பேசுகையில், "வெண்புள்ளி என்பது நோய் அல்ல. இது குணப்படுத்தக்கூடியது. இதற்கான மருந்தை மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. 



இந்த மருந்தை தொடர்ந்து 400 நாட்கள் உண்டுவர வெண்புள்ளிகள் மறைந்து இயல்பான தோலின் நிறத்தை அடையலாம். உலகப் பிரபலம் பெற்ற மைக்கில் ஜாக்ஸனுக்கும் வெண்புள்ளிகள் இருந்தன. இந்தியாவில் பலருக்கு இந்த வெண்புள்ளி உள்ளது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்." என்றார். 

தொடர்ந்து, வெண்புள்ளிக்கான மருந்தை கிருஷ்ணா ஸ்வீட்ஸ்-ன் தலைவர் கிருஷ்ணன் வெளியிட்டார். இதனை 100-க்கும் மேற்பட்டவர்கள் வாங்கிச்சென்றனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...