திருப்பூர் மாவட்ட மக்களை மகிழ்வித்த ஜல்லிக்கட்டு: வீரம் பொங்க விளையாடிய மண்ணின் மைந்தர்கள்

போட்டி தொடங்கியது முதலே காளைகள் சீறிப்பாய்ந்தன. ஆனால், சற்றும் சளைக்காத வீரர்கள் திமிரிய காளைகளை அடக்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுப் போட்டியில் 535 காளைகள் பங்கேற்றன. 

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 



இதனைத் தொடர்ந்து, இதுவரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாத மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தவும், அதனைக் கண்டுகளிக்கவும் ஆர்வம் காட்டினர். 

அதன்படி, சமீபத்தில் கோவையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று திருப்பூர் மாவட்டம் அலகுமலை பகுதியில் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.



இதற்கான அறிவிப்பு வெளியானவுடனேயே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 700-க்கும் மேற்பட்ட காளைகள் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதாக பதிவாகின. 

பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் இதற்காக பெயர்களை பதிவு செய்தனர்.

தொடர்ந்து, இன்று காலை கால்நடை பராமரிப்புத்துறை  அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

முரட்டுக் காளைகள் 

மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு  போட்டியை காண திருப்பூர் மட்டுமல்லாது சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் அலகுமலையில் குவிந்தனர். 



போட்டி தொடங்கியது முதலே காளைகள் சீறிப்பாய்ந்தன. ஆனால், சற்றும் சளைக்காத வீரர்கள் திமிரிய காளைகளை அடக்கினர். 

அவ்வாறு காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களில் 35 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்த வீர விளையாட்டுப் போட்டியில் விக்னேஷ் என்ற மாடுபிடி வீரர் 11 மாடுகளை அடக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார். அவருக்கு ஒரு இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டது. 

தொடர்ந்து, ராஜசேகர் என்ற வீரர் 9 மாடுகளை அடக்கி இரண்டாம் பரிசைப் பெற்றார்.



சிறப்பான முறையில் ஜல்லிகட்டு விளையாட்டுப் போட்டி நடைபெற்றுள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்த  திருப்பூர் மாவட்ட மக்கள்,  இந்த விளையாடுப் போட்டி ஆண்டுதோறும்  நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...