ஜப்பான் செல்ல தேர்வாகியுள்ள மேட்டுப்பாளையம் மலைக்கிராம மாணவி

மாணவர்கள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் பயிலும் மேட்டுப்பாளையம் மலைக்கிராம பழங்குடியின மாணவி ஜப்பான் செல்ல தேர்வாகியுள்ளார்.

மேட்டுப்பாளையம்: மாணவர்கள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளியில் பயிலும் மேட்டுப்பாளையம் மலைக்கிராம பழங்குடியின மாணவி ஜப்பான் செல்ல தேர்வாகியுள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள தமிழக கேரள எல்லையோரத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது வெள்ளியங்காடு என்னும் கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் செயல்பாடும் கற்பித்தலும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றது.

மலைக்காட்டின் நடுவே உள்ள பில்லூர் அணையைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட பழங்குடியின மலைக்கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகளை ஊக்குவித்து சிறந்த கல்வியினை கொடுப்பதோடு அவர்களை விளையாட்டு, அறிவியல் ஆக்கம் என அனைத்து வகையிலும் மேம்படுத்தி பெருநகரப்பகுதியில் பல்வேறு வசதிகளோடு இயங்கும் பெரிய தனியார் பள்ளி மாணவ மாணவிகளோடு போட்டியிட்டு வெற்றி பெறும் அளவிற்கு இந்த அரசுப்பள்ளியின் செயல்பாடு அமைந்துள்ளது.



கடந்த பத்தாண்டுகளாக பத்தாம் மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளில் நூறு சதவிகதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வரும் இந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்போது பழங்குடியின மாணவ மாணவிகள் மட்டுமல்லாது மேட்டுப்பாளையம், காரமடை போன்ற நகர பகுதியில் இருந்தும் கூட பலரும் இப்பள்ளியில் சேர்ந்து பயில ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பொதுத் தேர்வுகளை சந்திக்கவுள்ள மாணவ மாணவிகளுக்குப் பள்ளி முடிந்த பின் சத்தான சிற்றுண்டி வழங்கி மாலை நான்கு முதல் ஆறு மணிவரை இரண்டு மணிநேரம் சிறப்பு வகுப்புகள் எடுக்கும் இப்பள்ளியின் ஆசிரியர்கள், தினசரி அதிகாலை சரியாக ஐந்து மணிக்கு தவறாமல் அவர்களது பெற்றோர்களை செல்போன் மூலம் அழைப்பு விடுத்து மாணவர்களை படிக்க எழுப்பிவிடுமாறு பரிந்துரைக்கின்றனர். அதோடு, இன்று என்ன படிக்க வேண்டும் என சிறு கலந்துரையாடலும் நடத்துகின்றனர். 

பள்ளி நிர்வாகத்தின் இந்த ஊக்கமே சரியான பேருந்து வசதிகூட இல்லாத கிராமங்களில் இருந்தும் கூட மாணவர்களை பள்ளி வர தூண்டுகிறது. எப்போதும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள மலைக்கிராமங்களில் இருந்து சிரமத்தை பொருட்படுத்தாமல் பில்லூர் அணையின் நீர்த்தேக்கத்தைப் பரிசல்கள் மூலம் கடந்தும் இப்பள்ளிக்கு பழங்குடியின மாணவ மாணவிகள் ஆர்வமுடன் தினசரி கல்வி கற்க வருவது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான்

இந்நிலையில், ஜப்பான் - ஆசிய மாணவர்கள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் ஜப்பான் செல்வதற்கு இப்பள்ளியில் பயிலும் ஒரு பழங்குடியின மாணவியும் இங்கு கல்வி கற்றுத்தரும் ஆசிரியை ஒருவரும் தேர்வாகியுள்ளனர். இது இந்த அரசுப்பள்ளியின் மற்றுமொரு சிறப்பாக அமைந்துள்ளது.



இந்த ஆண்டு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஜப்பான் – ஆசிய மாணவர்கள் பரிமாற்ற திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் இருந்து அறிவியல் பாடத்தில் சிறந்து விளங்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் மூலம் ஜப்பானுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலிருந்தும் 96 மாணவர்கள் மற்றும் 16 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



அதன்படி தமிழகத்தில் இருந்து ஐந்து மாணவர்களும் ஒரு ஆசிரியையும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் காளியப்பனூர் என்னும் மலைக்கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி எம்.சவிதா மற்றும் இப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியை ஆர்.மகேஸ்வரி தேர்வாகி கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.



இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இருந்து தேர்வான ஒரே ஆசிரியை என்ற பெருமையை மகேஸ்வரி பெற்றுள்ளார். அடர்ந்த வனத்தின் நடுவே போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லாத இப்பகுதி மலைக்கிராம பழங்குடியின மக்கள் சுமார் பத்து கிலோமீட்டர் நடந்தும் 80 கிலோமீட்டர் பேருந்துகளில் பயணித்தும் கோவை போன்ற நகரப்பகுதிக்குச் செல்வதே மிக மிக அரிதானது என்ற நிலையில், தங்களது கிராமத்தில் இருந்து ஒரு சிறுமி மத்திய அரசின் செலவில் விமானத்தில் பறந்து ஜப்பான் போன்ற வெளிநாட்டுக்குச் செல்லவுள்ளது இப்பகுதி மலைவாழ் மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...