ஆந்திர மாநிலத்தில் 5 தமிழர்கள் சடலமாக மிதந்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் - வைகோ

ஆந்திர மாநிலத்தில் 5 தமிழர்கள் சடலமாக மிதந்தது தொடர்பாக விளக்க அறிக்கையை தமிழக அரசு பெற வேண்டும் என்றும், மரணத்தில் சந்தேகம் இருந்தால் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்றும் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கோவை: ஆந்திர மாநிலத்தில் 5 தமிழர்கள் சடலமாக மிதந்தது தொடர்பாக விளக்க அறிக்கையை  தமிழக அரசு பெற வேண்டும் என்றும், மரணத்தில் சந்தேகம் இருந்தால்  சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்றும் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் ராமசாமி ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ மற்றும் ஆகியோர் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தனர்.

அப்போது மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் ராமசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், " தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்பதால் எனக்கு இந்தியா வர இருந்த தடையை உடைத்தவர் வைகோ. எனவே, அவர் மலேசியா செல்ல உள்ள தடை உடைக்கப்படும். தமிழீழம் மலர வேண்டும் என்ற எனது கருத்தில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை" என்றார்.

இதையடுத்து ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், "ஆந்திர மாநில காவல் துறையினரால் கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்கள் கொல்லப்படுவது தொடர்ந்து வருகின்றது. ஆந்திர மாநில ஏரியில் 5 தமிழர்கள் சடலமாக மிதந்தது அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் அடித்து கொலை செய்யப்பட்டனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு ஆந்திர அரசிடம் விளக்க அறிக்கை பெற முயற்சிக்க வேண்டும். மேலும் இவர்களது மரணத்தில் சந்தேகம் இருந்தால் சி.பி.ஐ., விசாரணை கோர வேண்டும். ஈழ அகதிகளுக்கான சிறப்பு முகாம்களே இருக்கக் கூடாது என்பதே ம.தி.மு.க.,வின் நிலைப்பாடு" என்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...