மரங்களில் ஆணியடித்து மாட்டப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் அகற்றம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மரங்களில் ஆணியடித்து விளம்பரம் செய்யப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மரங்களில் ஆணியடித்து விளம்பரம் செய்யப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டது.



கோவை திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மரங்களில் ஆணியடித்து விளம்பரப் பதாகைகள் வைத்து விளம்பரம் செய்யப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன. 



இதனைத் தொடர்ந்து, 'ஓசை தன்னார்வ அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திருநெல்வேலியைச் சார்ந்த பேன்ட்செட் என்ற நிறுவனத்தினரே மரங்களில் விளம்பரங்கள் செய்திருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அந்த நிறுவனத்தினரே மரங்களில் பொருத்தப்பட்டிருக்கும் விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் என்று ஓசை அமைப்பினர் வலியுறுத்தினர். 

அதன் பேரில், அனைத்து மரங்களிலும் மாட்டப்பட்டிருந்த பல்வேறு நிறுவனங்களின் விளம்பரப் பதாகைகளையும் அந்த நிறுவனத்தினரே அகற்றினர். இதே போல் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரங்களில் ஒரு குறிப்பிட்ட கல்லூரி தொடர்பான விளம்பரம் சுமார் 500-க்கும் மேற்பட்ட மரங்களில் ஆணியடித்து மாட்டப்பட்டுள்ளது.

அவற்றையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், இவ்வாறாக மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்தால் ஒரு மரத்திற்கு ரூ.2000 வீதம் அபராதம் வசூலிக்கலாம் என்று நீதிமன்ற தீர்ப்பு உள்ளதாகவும் ஓசை அமைப்பைச் சேர்ந்த சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...