பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்த பயிற்சி முகாம் தொடக்கம்

பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்த அரசு அதிகாரிகளுக்கு 3 நாள் பயிற்சி முகாம் உதகையில் தொடங்கியது.

நீலகிரி : பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்த அரசு அதிகாரிகளுக்கு 3 நாள் பயிற்சி முகாம் உதகையில் தொடங்கியது. 



மலை மாவட்டமான நீலகிரியில் மழை காலங்களில் நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்படுவது வழக்கமான ஒன்று. இந்நிலையில் விரைவில் பருவமழை துவங்க உள்ளது. இந்த மழையின் போது நிலச்சரிவு ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணிகளானது மாவட்டத்தில் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், உதகையில் 3 நாட்கள் பேரிடர் மீட்பு பயிற்சி இன்று தொடங்கியது. இப்பயிற்சியானது காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் பேரிடர் மேலாண்மையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஆசி பெங்கார மற்றும் தலைமை கமாண்டர் ரேகா நம்பியார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், பொதுமக்களை நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து பயிற்சி பெறுபவர்களுக்கு எடுத்துரைத்தனர். பேரிடர் மேலாண்மை மீட்புக்காக 13 பட்டாளியன் தொடங்கப்பட்டு, இதற்காக ரூ. 13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 3 நாள் பயிற்சியில் களப்பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...