”அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுவது எதிர்கட்சியின் பணியல்ல”

காவிரி நீர் விவகாரம் குறித்து அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுவது எதிர்கட்சியின் பணியல்ல, என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் விவகாரம் குறித்து அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுவது எதிர்கட்சியின் பணியல்ல, என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளரிடம் அவர் பேசுகையில், ''இரட்டை இலைச் சின்னம், தலைமை கழகம் கிடைப்பதற்காகவும், 1 1/2 கோடி தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் அ.தி.மு.க., இணையப் பாடுபட்டோம். மேலும், பிரதமரை சந்தித்து ஆலோசனை கேட்டதில் கழகம் பிரியக் கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில் இணையக் கூறினார். அதன்படி, இணைந்தோம். தினகரன் 18 எம்.எல்.ஏ.க்களை வைத்து ஆட்சியைக் கலைக்க நினைக்கிறார். மத்திய அரசின் திட்டங்களில் ஜெயலலிதா எந்த நிலையை எடுத்தாரோ, அதே நிலையை நாங்கள் கடைபிடிக்கிறோம். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காவிரிநீர் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஆராய்ந்து, சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி அனைத்து கட்சி கூட்டத்தினை முடிவு செய்யும் நேரத்தில், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுகிறார். ஆளும் கட்சிதான் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட முடியும். காவிரி நீருக்காக ஜெயலலிதா உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி, உண்ணாவிரதம் இருந்து நல்ல  தீர்ப்பினை பெற்று தந்ததோடு இல்லாமல், காவிரி ஆணையம் அமைக்க ஏற்பாடு செய்தார். சில வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதால், அது பற்றி கருத்துக் கூற முடியாது.'' இவ்வாறு கூறினார்,

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...