பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவண பத்திர எழுத்தர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் மூலம் பத்திரம் பதிவு செய்வதை ஏற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆவண பத்திர எழுத்தர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர்: ஆன்லைன் மூலம் பத்திரம் பதிவு செய்வதை ஏற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆவண பத்திர எழுத்தர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஆன்-லைன் மூலம் பத்திரம் பதிவு செய்து கொள்வதை பதிவுத்துறை ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும், ஆன்-லைன் மூலம் பதிவு கட்டணம் செலுத்தி பத்திரப்பதிவு செய்வது தடைபட்டால், பதிவு கட்டணத்தை திரும்பப் பெற வழிவகை செய்ய வேண்டும், மற்றும் உயில் சாசனம் போன்ற ஆவணங்களைப் பதிவு செய்ய ஆப்லைன் மூலம் பத்திரப் பதிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



மேலும், பத்திர எழுத்தர்களை இடைத்தரகர் என்று கூற வேண்டாம் என்றும், மேற்கூறிய தீர்மானங்கள் நிறைவேற வேண்டும் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர். தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாவிடில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம் எனவும் ஆவண பத்திர எழுத்தர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட எழுத்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...