ஆடு மேய்ந்த பிரச்சினையில் அவமரியாதை செய்ததாக 4 பேர் மீது வழக்கு

திருப்பூர் அருகே தோட்டத்தில் ஆடு மேய்ந்ததற்காக தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அவமரியாதை செய்ததாக பாதிக்கப்பட்டவர் காங்கேயம் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே தோட்டத்தில் ஆடு மேய்ந்ததற்காக தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அவமரியாதை செய்ததாக பாதிக்கப்பட்டவர் காங்கேயம் போலீஸில் புகார் அளித்துள்ளனர். 



காங்கேயம் அருகே பரஞ்சேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட தீத்தாம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சக்திவேல். இவருக்கு தேவி என்ற மனைவியும், மலர்விழி (19) என்ற மகளும், சதீஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். கடந்த வாரம் இவர்களது ஆடு பக்கத்து தோட்டத்தில் மேய்ந்து விட்டதாக சரசு என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த 15-ம் தேதி இரவு 9 மணிக்கு குட்டவலசு பகுதியைச் சேர்ந்த சோமு, சண்முகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில் ஆகியோர் சக்திவேலை அழைத்துப் பேசியுள்ளனர். 



அப்போது, ஆடு மேய்ந்தது தொடர்பாக ஊர்க் கூட்டம் போட்டுள்ளதாகவும், சரசுவை தகாத வார்த்தைகளில் பேசிய சக்திவேலுவின் மகள் மலர்விழியை அழைத்து வரும்படியும் கூறியுள்ளனர். இரவு நேரம் என்பதால் அவர்களை அழைத்து வர சக்திவேல் மறுத்துள்ளார். தொடர்ந்து அவர்கள் மிரட்டல் விடுத்ததால், மனைவி, மகன் மற்றும் மகளை சக்திவேல் அழைத்து வந்துள்ளார். தோட்டத்தில் ஆடு மேய்ந்த விவகாரத்தில் மலர்விழி, தோட்ட உரிமையாளர் சரசுவை தகாத வார்த்தை பேசியதாகவும், எனவே, காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ. 5 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும் என மிரட்டியதாகத் தெரிகிறது. 

இதனால், மலர்விழிக்குப் பதில் அவரது தாயார் தேவி, காலில் விழுவதற்கு தயாராக இருந்த நிலையில், அதனைக் குறுக்கிட்ட அவரது மகன் சதீஸ்குமாரை கூட்டத்தில் இருந்த சிலர் தாக்க முயன்றுள்ளனர். அப்போது, தடுக்க நினைத்த தேவி தாக்கப்பட்டுள்ளார். பின்னர், சகோதரனைக் காப்பாற்ற நினைத்த மலர்விழி, அங்கிருந்தவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தேவியும், அவரது கணவர் சக்திவேலுவும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.

சாதாரணமாக ஆடு மேய்ந்த பிரச்சினையில் வார்த்தை பேசியதாக மன்னிப்பு கேட்க வைத்து, குடும்பத்தையே காலில் விழ வைத்து, தாக்கி அவமானப்படுத்தியதாக சண்முகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர், கவீன், மனோகர், செந்தில் ஆகியோர் மீது காங்கயம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தேவி புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 4 பேரும் தலைமறைவாகி விட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக காங்கேயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...