''மார்ச் முதல் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீடு திட்டம் அமல்''

பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீடு திட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை : பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீடு திட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக அரசு பள்ளிகளில் வை-பை வசதி உருவாக்கப்பட உள்ளது. மேலும், பள்ளி கல்வித்துறையில் தமிழக அரசு மிக வேகமாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கான விபத்துக் காப்பீடு திட்டத்தை அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இத்திட்டத்தின் மூலம் விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு ரூ. 1 லட்சமும், பெரிய காயங்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும். இந்தப் பணத்தை 48 மணி நேரத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்வழி ஏற்படுத்தும் விதமாக, புத்தக வடிவில் கவுன்சிலிங் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு சமயங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் மனரீதியான பிரச்சனைகளுக்கு சினேகா என்னும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கல்வித்துறை பணியாற்ற உள்ளது. மேலும், பத்து முதல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு கேள்வி தாள்கள் குறைக்கப்பட்டு, தேர்வுக்கான நேரமும் இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எவ்வித பயமுன்றி தேர்வை சந்திக்கலாம். இவ்வாறு கூறினார். 

நடிகர் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜெயகுமார், அதற்கு பதில் அளிப்பார் என கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...