ஆத்துப்பாலம் - ஒப்பணக்காரவீதி மேம்பாலத் திட்டம் மாற்றத்திற்கு தி.மு.க., எதிர்ப்பு

ஆத்துப்பாலம் - ஒப்பணக்காரவீதி வரை கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் திட்டத்தை மாற்றியமைத்தால், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக கோவை மாவட்ட தி.மு.க, அறிவித்துள்ளது.

கோவை: ஆத்துப்பாலம் - ஒப்பணக்காரவீதி வரை கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் திட்டத்தை மாற்றியமைத்தால், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக கோவை மாவட்ட தி.மு.க, அறிவித்துள்ளது. 

கோவையில் கட்டப்பட உள்ள மேம்பாலத்தின் வரைபடத்தை மாற்றிக் கட்ட அ.தி.மு.க., அரசு திட்டமிட்டு வருகின்றது. இதுதொடர்பாக, கோவை பீளமேட்டில் தி.மு.க., மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''பாலக்காட்டிலிருந்து, ஆத்துப்பாலம், ஒப்பணக்காரவீதி வரை உயர்மட்ட மேம்பாலம் கட்ட அ.தி.மு.க., ஆட்சியில் ரூ. 121 கோடி மதிப்பீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. ஆத்துப்பாலத்திலிருந்து கட்டத் திட்டமிடப்பட்ட இந்த மேம்பாலம் தற்போது, கரும்புக்கடை பகுதியிலிருந்து கட்ட திட்டமிட்டுள்ளனர். இதனால், மக்களுக்குப் பயன்பெறாமல் போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே, தி.மு.க., ஆட்சியில் 3 அடுக்கு மேம்பாலமாக திட்டமிட்டிருந்ததை, 2 அடுக்கு மேம்பாலமாக மாற்றிக் கட்டப்பட்டது. இப்போது, அந்த மேம்பாலம் பொதுமக்களுக்கு பயன்பெறாமல் உள்ளது. இதேபோல, கோவையில் பல்வேறு மேம்பாலங்கள் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி மேம்பாலம், ஆவாரம்பாளையம் மேம்பாலம், போத்தனூர் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாலங்கள் கிடப்பில் போடப்பட்டும், ஆமை வேகத்தில் நடந்தும் வருகின்றது. இந்நிலையில், மக்களுக்குப் பயனற்ற நிலையில், ஆத்துப்பாலம் மேம்பாலத்தைக் கட்டினால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.'' இவ்வாறு கூறினார். 

மேலும், மாற்றியமைக்கப்பட்ட ஆத்துப்பாலம் - ஒப்பணக்காரவீதி மேம்பாலத் திட்ட வரைபடத்தையும் செய்தியாளர்களிடம் அவர் காண்பித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...