சோளத்தட்டுகளை ஏற்றிச் சென்ற லாரி மின்கம்பியில் உரசியதால் விபத்து

கோவை அருகே சோளத்தட்டுகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி, மின்கம்பியில் உரசியதில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

கோவை : கோவை அருகே சோளத்தட்டுகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி, மின்கம்பியில் உரசியதில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள காளிபாளையம் பகுதியில் ஒரு லாரி சோளத்தட்டுகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அதிக பாரம் ஏற்றி சென்ற அந்த லாரி, சாலையின் அருகே இருந்த மின்கம்பியில் உரசியதில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சோளத்தட்டுகளில் பற்றிய தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட ஒட்டுநர் லாரியில் இருந்து இறங்கி வெளியேறினார். 

இதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. பின்னர், பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். இதனால்,  லாரி முற்றிலும் எரிந்து நசமாவது தடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...