''இடஒதுக்கீடு ரத்தானால் கிராமப் பகுதிகளுக்கு மருத்துவர்கள் இல்லாத சூழல் உருவாகும்“

அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்தாகும் பட்சத்தில், கிராம பகுதிகளுக்கு மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகும் என தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க செயலாளர் ரவிசங்கர் தெரிவித்தார்.

கோவை : அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்தாகும் பட்சத்தில், கிராம பகுதிகளுக்கு மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகும் என தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க செயலாளர் ரவிசங்கர் தெரிவித்தார்.



இது குறித்து கோவை அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவிகித இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும். இந்தாண்டு 10,000-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்காக தேர்வு எழுதி உள்ளனர். இந்த நிலையில், அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என உருவாகும்பட்சத்தில், அவர்களுக்கான பின்னடைவாக இது இருக்கும். இது தொடர்பாக அவசர சட்டத்தை அனுப்பியிருக்கும் நிலையில், அதை செயல்படுத்த மத்திய அரசை, மாநில அரசு வலியுறுத்த வேண்டும். 

தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசு மரணம் தவிர்ப்பு, கர்ப்பிணிகளின் பாதுகாப்பு போன்றவை இதுபோன்ற மருத்துவர்களால் தான் மேம்பட்டிருக்கிறது. அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்தாகும் பட்சத்தில் கிராம பகுதிகளுக்கு மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகும். இதுவெறும் அரசு மருத்துவர்கள் சார்ந்த பிரச்சனை மட்டுமல்லாது, பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கின்ற விஷயம் என்பதால் மாநில அரசு, மத்திய அரசை வற்புறுத்தி மீண்டும் தமிழகத்தில் மருத்துவ பட்டய மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...