ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் 25 சவரன் நகை கொள்ளை

திருப்பூரில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரின் வீட்டு பூட்டு உடைத்து 25 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

திருப்பூர் : திருப்பூரில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரின் வீட்டு பூட்டு உடைத்து 25 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



அவிநாசியில் உள்ள ஸ்ரீராம் நகர் பகுதியில் வசித்து வருபவர் சண்முகம். இவர், தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இந்நிலையில், இவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி மற்றும் மகனுடன் வெளியூர் சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் கதவு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோக்களை உடைத்து, அதிலிருந்த 25 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்மநபர்களைக கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. 

இது குறித்து உடனடியாக அவிநாசி போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கொள்ளை கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...