முன்னாள் துணைவேந்தர் கணபதியின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி

பேராசிரியர் நியமன லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி தாக்கல் செய்த ஜாமின் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

கோவை: பேராசிரியர் நியமன லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி தாக்கல் செய்த ஜாமின் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி வழங்க ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய போது, துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர். அவருக்கு உதவி செய்த பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சார்பில் ஜாமின் கோரி ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை கடந்த 8-ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட கோவை ஊழல் தடுப்பு வழக்குகள் நீதிமன்றம், அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஜாமின் மனுவை நிராகரித்தது.

இதனால், கடந்த வாரம் கணபதியை 4 நாள் காவலில் எடுத்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். இதனிடையே, இரண்டாவது முறையாக ஜாமின் கோரி முன்னாள் துணைவேந்தர் கணபதியின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கோவை ஊழல் தடுப்பு வழக்குகள் நீதிமன்றம், மீண்டும் தள்ளுபடி செய்தது. மேலும், பேராசிரியர் தர்மராஜின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...