கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தைப்புலியை மீட்ட வனத்துறையினர்

நீலகிரி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தைப்புலியை சில மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்ட வனத்துறையினர், அதனை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

நீலகிரி: நீலகிரி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தைப்புலியை சில மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்ட வனத்துறையினர், அதனை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

மஞ்சூர் அருகே குந்தா வனச்சரகத்துக்கு உட்பட்ட முக்கிமலை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சிவன் கோவில் உள்ளது. இதன் அருகே வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்கள் உள்ளன. அங்குள்ள தேயிலை தோட்டத்தில் 3 கிணறுகள் உள்ளன. இதில், 2 கிணறுகளில் வனவிலங்குகள் எதுவும் விழுந்து விடக் கூடாது என்பதற்காக இரும்பு கம்பிகளால் ஆன தடுப்பு மூடி போடப்பட்டு உள்ளது. ஆனால், ஒரு கிணற்றில் மூடி எதுவும் போடவில்லை. 50 அடி ஆழமுள்ள திறந்தவெளி கிணற்றில், தற்போது 3 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

இந்த நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில் முக்கிமலை கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தேயிலை பறிக்க சென்றனர். அப்போது, கிணற்றுக்குள் உறுமல் சத்தம் கேட்டது. உடனே தொழிலாளர்கள் அந்தக் கிணற்றுக்குள் எட்டி பார்த்தனர். கிணற்றுக்குள் ஒரு சிறுத்தைப்புலி அங்கும், இங்கும் உலாவிக்கொண்டு இருந்தைக் கண்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் குந்தா வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரகர் ராமச்சந்திரன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு, கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தைப்புலியை உயிருடன் மீட்பு குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, அங்கு கூடி இருந்த பொதுமக்கள், இப்பகுதியில் சிறுத்தைப்புலிகள் அட்டகாசம் அதிகரித்து விட்டதாகவும், கிணற்றுக்குள் கிடக்கும் சிறுத்தைப்புலியை மயக்க ஊசி போட்டு பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து, சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு, சிறுத்தைப்புலி பத்திரமாக மீட்கப்பட்டு, சிறிது தூரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...