வனத்துறையினருக்கு மனிதர் - யானை மோதலை தடுக்கும் பயிற்சி

கோவை மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட வனத்துறையினருக்கு மனிதர் - யானை மோதலை தடுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை: கோவை மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட வனத்துறையினருக்கு மனிதர் - யானை மோதலை தடுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. 



மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் மனிதர் - யானை எதிர்கொள்ளல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. வனத்தை விட்டு வெளியேறும் யானைகளின் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக ஏற்பட்ட மனித யானை மோதலில் கடந்த பன்னிரெண்டு மாதகாலத்தில் மட்டும் 19 மனித உயிர்களும், 22 யானைகளும் பலியாகியுள்ளன. மேலும், சுமார் 45 சதவிகித வேளாண் பயிர்களும் அழிக்கப்பட்டுள்ளன. இந்த அபாயகரமான சூழல் வரும் கோடை காலத்தில் ஏற்படும் வறட்சியால் மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.



இந்நிலையில், காட்டுயானைகளின் ஊடுருவலால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை பகுதிகளின்  வனச்சரகங்களில் பணியாற்றி வரும் வனத்துறையினருக்கு, யானைகளின் நடமாட்டத்தையும், அதன் எண்ணிக்கை மற்றும் இயல்புகள் குறித்து துல்லியமாக கண்டறிதல் குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. உலகளாவிய இயற்கைக்கான நிதியம் சார்பில் [WWF] வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட இப்பயிற்சியில் அனைவருக்கும் எளிமையாகப் புரியும் வகையில், திரையில் காட்சிகள் மூலம் விளக்கப்பட்டது. 



தொடர்ந்து, இடம் மாறியபடி சுற்றி வரும் யானைகளை சரியாக கணக்கிடுவது எப்படி, வேளாண் பயிர்களை உண்டு பழகியதன் காரணமாகவே மீண்டும் மீண்டும் விளைநிலங்களை நோக்கிப் படையெடுக்கும் யானைகளைக் கண்டறிதல், மனிதர்களை எதிர்கொண்டால் ஆவேசமாக தாக்க முற்படும் யானைகளை மட்டும் தனியாக பிரித்து கணக்கிடுதல், அவற்றைப் புகைப்படம் எடுக்கும் முறை, மனித யானை மோதலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இதுபோன்ற நிகழ்வுகளின் போது யாருக்கும் பாதிப்பின்றி யானைகளைக் காட்டுக்குள் விரட்ட எடுக்கப்படவேண்டிய திட்டங்கள், குறித்து வனத்துறையினருக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இந்த புதிய முயற்சி மூலம் கொடுக்கப்படும் பயிற்சியால் வரும் காலங்களில் யானை மனித மோதல்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...