சேலம் - எர்ணாகுளம் இடையே சிறப்பு கட்டண ரயில் அறிவிப்பு

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் வசதிக்காகவும் சேலம் - எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளின் வசதிக்காகவும் சேலம் - எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

ரயில் எண் - 06011 எர்ணாகுளம் சந்திப்பு - சேலம் சிறப்பு கட்டண ரயில் வரும் ஏப்ரல் 08-ம் தேதி முதல் ஜுலை 01-ம் தேதி வரை இயக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 08-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.45 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 06.40 மணிக்கு சேலம் வந்தடைகிறது.

இதேபோல, ரயில் எண் - 06012 சேலம் - எர்ணாகுளம் சந்திப்பு சிறப்பு கட்டண ரயில் வரும் ஏப்ரல் 09-ம் தேதி முதல் ஜுலை 02-ம் தேதி வரை இயக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 09-ம் தேதி (திங்கள்கிழமை) இரவு 10.30 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 07.45 மணிக்கு சென்றடைகிறது. 

இதில், 4 குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 13 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 2 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலானது, ஆலுவா, திரிசூர், ஒட்டபாலம், பாலக்காடு, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...