பாண்டியாறு - புன்னம்புழா அணை திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

கூடலூரில் உற்பத்தியாகி அரபி கடலில் வீணாக கலக்கும் 14 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க உருவாக்கப்பட்ட பாண்டியாறு – புன்னம்புழா அணை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

நீலகிரி: கூடலூரில் உற்பத்தியாகி அரபி கடலில் வீணாக கலக்கும் 14 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க உருவாக்கப்பட்ட பாண்டியாறு – புன்னம்புழா அணை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். 



நீலகிரி மாவட்டம் கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சுற்றிலும் வனப்பகுதிகளை கொண்ட இந்த ஊரில், ஏரளாமான ஆறுகள் மற்றும் நீரோடைகள் உள்ளன. இது அனைத்துமே ஆண்டுதோறும் நீரை அளிக்க கூடியவையாகும். ஓவேலி மற்றும் தேவாலா மலை பகுதிகள் தான் கூடலூருக்கு முக்கிய நீராதராமாக உள்ளன. முகூர்த்தி மலை மற்றும் நீலகிரி பீக் ஆகிய மலைப் பகுதிகள் தான் ஓவேலி பகுதிக்கு முக்கிய நீராதாரமாக உள்ளன. அங்கிருந்து உற்பத்தியாகும் ஆறுகள் மற்றும் சிறிய நீரோடைகள் ஓவேலி பகுதியில் உள்ள சுண்டி, பார்வுட், சீபுரம், எல்லமலை வழியாக பெரிய ஆறுகளாக ஓடுகின்றன. அதேபோல, கூடலூர் அருகேயுள்ள தேவாலா பகுதியில் உள்ள மலைகள் மற்றும் வனப்பகுதிகளில் உற்பத்தியாகும் நீரோடைகள் ஒன்று சேர்ந்து பெரிய ஆறாக ஓடுகின்றன.

ஓவேலி மற்றும் தேவாலா பகுதிகளில் உற்பத்தியாகும் இந்த ஆறுகள் கூடலூர் அருகேயுள்ள மரப்பாலம் வனப்பகுதியில் ஒன்று சேர்கின்றன. இவ்வாறு ஒன்று சேரும் ஆறு தான் பாண்டியாறு என அழைக்கப்படுகின்றது. பாண்டியாறு, தமிழக கேரளா எல்லையில் உள்ள கீழ்நாடுகாணி வனப்பகுதி வழியாகப் பாய்ந்து கேரளாவை அடைந்தவுடன் அது புன்னம்புழா ஆறாக மாறுகிறது. பின்னர், இந்த ஆறு கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலியாற்றில் கலந்து, நேராக அரபிக் கடலில் கலக்கின்றது. இந்தத் தண்ணீரை இரு மாநில விவாயிகளும் பயன்படுத்துவதில்லை.



1960ஆம் ஆண்டுகளில் கூடலூரில் ஆண்டிற்கு 7 முதல் 8 ஆயிரம் மி.மீட்டர் மழை பொலிந்து வந்த நிலையில், இங்கிருந்து 14 டி.எம்.சி., தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்க பாண்டியாறு – புன்னம்புழா அணை திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, ஓவேலி மற்றும் மரப்பாலம் பகுதிகளில் இரண்டு அணைகள் கட்டி, மற்ற பகுதிகளில் உள்ள ஆறுகளை இந்த அணைகளுக்கு திருப்ப திட்டமிடப்பட்டது. அவ்வாறு தேக்கப்படும் 14 டி.எம்.சி., தண்ணீரில் தமிழகத்திற்கு 7 டி.எம்.சி.,யும் கேரளாவிற்கு 7 டி.எம்.சி.,யும் இரு மாநிலங்களால் பகிர்ந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. அதில், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கேரளா எடுத்துக்கொள்ளவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. தமிழகத்திற்கான தண்ணீரை, அணை கட்டப்படும் இடத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள மாயாறு ஆற்றோடு இணைத்து அதனை பவனிசாகர் அணைக்கு கொண்டு செல்வது தான் திட்டத்தின் நோக்கம். 

அதன்படி 1968 ஆண்டு பாண்டியாறு– புன்னம்புழா அணை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கான, முதற்கட்ட பணிகள் கூடலூர் அருகேயுள்ள மரப்பாலம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. தண்ணீரின் அளவை அளப்பதற்கான அமைப்புகளும், மரப்பாலம் ஆற்றில் கட்டப்பட்டது. ஆனால், சுற்றுசூழல் பாதிப்பு, வனவிலங்குகளுக்கு ஆபத்து என பல காரணங்களால் இந்தத் திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. 

கூடலூரில் உள்ள ஆறுகளில் இருந்து ஆண்டு முழுவதும் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் சென்று கொண்டே இருக்கும். இதன் மூலம் ஈரோடு, கோவை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயத்தைச் செழிக்க வைக்க முடியும். எனவே அரசு இனியும் தாமதிக்காமல் கூடலூரில் உள்ள ஆறுகளில் உற்பத்தியாகும் தண்ணீரை பவானிசாகர் அணைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுக்கிறது. 

அதேவேளையில், 1968 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், தற்போது கூடலூரில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட இடத்தில் அணை கட்டப்பட்டால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கும் நிலை உருவாகும். எனவே அணை கட்டுவதற்கு பதிலாக ஆற்றின் பல இடங்களில் தடுப்பணைகளை கட்டியும், ராட்சத குழாய்களை அமைத்து, இந்த தண்ணீரை பவானி ஆற்றின் கிளை நதியான மாயாறு ஆற்றில் கொண்டு சேர்த்தால், எளிதாக இந்த தண்ணீர் முழுவதும் பவானிசாகர் அணையை சென்று சேர்ந்துவிடும்.

கூடலூரில் உள்ள முக்கிய ஆறுகளை, தடுப்பணை கட்டி கிளை ஆறுகளோடு இணைத்து, மாயாற்றில் கலக்கச் செய்ய முடியும். மாயாறு முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக, தெங்குமரடாவை கடந்து பவானி ஆற்றில் கலக்கின்றது. இதற்கிடையே, மாயாரில் நீர் மின் உற்பத்தி நிலையமும் உள்ளது. கூடுதலாக, செல்லும் தண்ணீரை கொண்டு கூடுதல் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். கூடலூர் பகுதி மக்கள், சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பிலாத வகையிலான இந்தத் திட்டத்தை அரசு நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...