கழிவு பஞ்சு குடோனில் பயங்கர தீவிபத்து : ஒரு கோடி மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசம்

கோவை மாவட்டம் காளப்பட்டி பகுதியில் உள்ள கழிவு பஞ்சு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சாம்பலாகின.


கோவை : கோவை மாவட்டம் காளப்பட்டி பகுதியில் உள்ள கழிவு பஞ்சு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சாம்பலாகின.



காளப்பட்டியில் உள்ள என்.ஜி.பி. கல்லூரிக்குப் பின்புறம் ஸ்ரீராம் என்பவருக்கு சொந்தமான சந்திரா கழிவு பஞ்சு குடோன் உள்ளது. இதில், இன்று மாலை சுமார் நான்கு மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது, பஞ்சு குடோன் என்பதால், மற்ற பகுதிகளுக்கும் மளமளவெனப் பரவியது.  இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காணப்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கபட்டதைத் தொடர்ந்து, பீளமேடு, கணபதி, தெற்கு தீயணைப்பு அலுவலகங்களில் இருந்து வந்த 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் முழுமையாக தீ அணைக்கப்படவில்லை. இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முழு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

தீ விபத்து குறித்து உரிமையாளர் ஸ்ரீராம் தெரிவிக்கையில், ''1,500 டன் கழிவு பஞ்சு எரிந்து நாசமாகியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் இருக்கும்.'' என்றார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...