கொத்தடிமை தொழிலாளர் முறை அறவே ஒழிப்பு : மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை அறவே ஒழிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்தார்.

கோவை : கோவை மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை அறவே ஒழிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்தார். 



கொத்தடிமைகள் தொழிலாளர் ஒழிப்பு மாவட்ட கண்காணிப்பு குழுக்கூட்டம் ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழக அரசு பணம் பெற்றதற்கு மாற்றாக கொத்தடிமைகளாக பணியாற்றுபவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்திடும் நோக்கில் கொத்தடிமைகள் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் 1976-யை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றது. இச்சட்டத்தின் படி, முன்பணம் வாங்கிய முதலாளிகளிடமும், தொழிலகங்களிலும், குடும்பத்துடனோ, அல்லது தனியாகவோ, கொத்தடிமை தொழிலாளர்களாக பணி மேற்கொள்ள நிர்பந்திக்கும் முதலாளிகளின் மீது கடுமையான தண்டனைகளும் அபராதங்களும் விதிக்கப்படுகின்றது.

 

மேலும், தொழிலாளர்களுக்கு முன்பணம் அளித்தல் மூலம், அதிகநேரம் பணிக்கு அமர்த்தி அவர்களின் உழைப்பை சுரண்டும் கொத்தடிமை தொழிலாளர் முறை என்பது கடுமையான சமூக குற்றமாகும். கொத்தடிமையாக தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால், கொத்தடிமை தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டம் 1976-ன் படி அபராதத்துடன் கூடிய 5 ஆண்டுகளுக்கு குறையாத சிறை தண்டனையும் அளிக்கப்படும் என்பதை தொழிலர்நலத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு தெரியப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நமது மாவட்டத்தில் இச்சட்டத்தினை தீவிரமாக செயல்படுத்த மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், தொழிலாளர் உதவி ஆணையரை (அமலாக்கம்) உறுப்பினர் செயலராகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய் கோட்டாட்சியர்கள், திட்ட அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட சமூகநல அலுவலர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் உள்ளிட்ட 17 அலுவலர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இக்கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குழு கோவை மாவட்டம் முழுவதும் தொழிலகங்கள் மற்றும் பிற இடங்களில் கொத்தடிமைகள் தொழிலாளர்கள் ஒழிப்பு சட்டத்தின் செயல்பாடு குறித்து நேரடி களஆய்வு மேற்கொள்ளப்படுவதுடன், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இக்கண்காணிப்புக்குழுவின் ஆலோசனைக்கூட்டமும் நடைபெறும். இக்கூட்டத்தில் இக்குழுவால் மேற்கொள்ள வேண்டிய மற்றும் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

மேலும், கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிப்பது குறித்தும், கொத்தடிமை தொழிலாளர்களை கண்டறிவதுடன் மட்டுமல்லாது, அவர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இச்சட்டத்தின் படி, மாநிலம் தழுவிய செயல்திட்டம் கோவை மாவட்டத்தில் அமல்படுத்திட, பல்வேறு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்படவேண்டும். இவ்வாறு கூறினார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...