சட்டவிரோதமாக விற்பனை செய்த போதைப் பொருட்கள் பறிமுதல்

நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 50 மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


நீலகிரி: நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 50,000 மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்கள் குட்கா மற்றும் புகையிலை பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தடுக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும், தமிழகத்தில் போதை பொருட்களை தடுக்கும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி அருகில் உள்ள கடைகளில் குட்கா, புகையிலை சோதனைகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் உள்ள கடைகளில், மாவட்ட வழங்கல் அதிகாரி தலைமையில் வட்டார அலுவலர் கலா, முதன்மை கல்வி அலுவலர், குழந்தைகள் நல பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறையினர் ஆகியோர் ஆய்வு நடத்தினர். அப்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக, வைக்கப்பட்டிருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...